Monday 16 June 2008

.

புலர்வுடன்..

விழித்துக் கொண்டால்
போதாது.
செழித்து விடவேண்டும்
வாழ்வு என்றால்,
சலியாத கடின செயற்பாடு முதல்,
நம்பிக்கை வைத்தே
நடைபோட வேண்டும்.
துன்பங்கள் கண்டு
துவண்டிட வேண்டாம்.
எத்தனை காலம்தான்
சொன்னோம் இதை
நம்மில் யார்தான்
விழிப்புற்றோம்?.

மொழி புரியா சோகங்களை
செவி கேட்டு அழுதது.?

சுதந்திரத்தில் கைவைத்தால்
சுவாசம் சுகமாகுமோ?

பேசுவது ஒன்றும் - பின்
பூசுவதும் ஒன்றுமாய்
மனிதரில் சில விசங்கள்..
இவை மாறிடாதா இங்கே?

நிமிடங்கள்,
நினைவுகள் தெளிவானால்
வெற்றி வாழ்வு
புலர்வுடன்.

- அருவி1 –ஊற்று9-2002 பிரதமஆசிரியர்- என் பதிவு

No comments: