'நாமெல்லாம் படைக்கப் பிறந்தவர்கள்'-----'எழுத்துயர படைப்பு
உயரும்படைப்புயர சமூகம்
உயரும்'
---
ஒருமுறை..
ஒன்று சொல்வேன்.
ஒரு முறை மலரும் மலர் போல்
மொட்டவிழும் ஒருமுறை பெண்மை.
தொட்டவிழும் ஒருமுறை தாய்மை.
கண்கள் பேசியோ? பேசாமலோ?
காதல் ஒரு முறை
.24.12.02
--------
'எல்லாத் தரப்பினரும் நல்ல வாசிப்பாளர்களாக இருந்தால்
உலகே உயர்ந்துவிடும்.'---------
'பிறப்பின் மகிமை புனிதமானது என்பதை நிரூபித்திட்ட
நன்நாளை நினைத்து நாமெல்லாம் மகிழ்ந்திருப்போம்.'-------
அமைதியை நாடும் மனம்
ஆறுதல் தேடும் இடம்
ஏதோ மனிதச் சத்தங்கள் பொறுக்கும். 23.09.00
------
தவறியவை தவறியவையே!
தடுமாற்றம் என்பது இருந்துவிட்டால்
தவறுதலுக்கு தப்ப முடிவதில்லை.
தப்புதல் என்பது?
தப்பாகாது எனச் சொல்வதற்கு இல்லை.
13.09.00
-----
காதல் மொழி.
சின்ன சின்ன பார்வைகள் போதும்
சிரித்த கண்கள் பூசுதல் போதும்
எந்தன் மனதை திருடிக்கொண்டதுமில்லாமல்
இல்லை என்று பொய்யும் சொல்வது
பெண்மையின் உண்மையோ?
--------
No comments:
Post a Comment