Friday, 30 January 2009



தமிழீழ விடுதலைப்புலிகள் வீரவணக்கம்

Tuesday, 24 June 2008

பொங்கு தமிழ் பொங்கும்!


பொங்கு தமிழ் எங்கும் பொங்கும் !


விழி கொண்டெழுகிறோம் - விடுதலை
மொழி கொண்டெழுகிறோம்,


பனியும், காற்றும்
படர்ந்து வரும் எதிரி
நரியின் கூட்டும்
நம்மை என் செய்யும் இங்கே!


விண்வெளியில் பறக்கும்
விழிதிறந்த நீலப் புலி வானேறும்,
விடுதலையின் விடைவரும் காலம்
உலகின் மூலை முடுக்கெங்கும் தீ மூட்டும்.


அண்ணன் புதுவையே! கவி
கொண்டணைத்த புதுமையே!
புறப்பட்டோம்

ஒரு வழி
ஒரு தலைக் குடைக்கீழ்
எழுகிறது தமிழீழத்தமிழ்.


பிஞ்சும் கூனும் கிழமும்
நெஞ்சு நிமிர்த்தி
கூடுடைத்து
விழுது கொண்டு
வீதியிறங்கி வேர் தேடி வரும்.

விடுதலை கீதம் கேட்கிறது காதில்
தலைமகன் விடுதலை வரிமுகங்கள்
வரவேற்கும் மொழிகேட்கிறது.
பொங்குதமிழ்எங்கும் தங்கும் பொங்கும்!
அதிலிருந்து எழுகிறது தமிழுயிர்.
வருகிறோம்! வருகிறோம்!
வரலாற்றில் தமிழீழம்
வருகிறோம்! வருகிறோம்!



நேசமுடன் சு.பா.ஈஸ்வரதாசன்

Friday, 20 June 2008

அகில உலகின் ஓசை ......


அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்அகவை 10
இறுவட்டுக்கான பாடல்
------------
ஓசை தமிழ் ஓசை
புலம் வாழ்வின் உறவோசை
நிலம் நீழும் இனவோசை - வான்
வலம் ஆழும் வானோசை
அகில உலகின் ஓசை ..... (ஓசை....)

இனம் வாழும் இடமெங்கும்
இசை மீட்டும் இனவுணர்வூட்டும்
திசை எட்டும்
கலை வள உள நிலை கிட்டும்
கடல் எல்லை அலை தாண்டும்
உடல் எங்கும் தமிழ் உயிர் கூட்டும்
அகில உலகின் ஓசை ..... (ஓசை)

வளமான எதிர்காலம்
வரும் காலம்
உளம் கானும்
இருள் காலம் இனி நீங்கும்
தமிழ் இனமானம் உலகோங்கும்
ஈழ மலர் பூக்கும் அக்காலம்
ஊர்கோலம் தமிழ்த் தேர் போகும்
உறவாகி உயர்வாகும் நமதாகும்
அகில உலகின் ஓசை (ஓசை )


சு.பா.ஈஸ்வரதாசன்.28.09.06

தமிழின விடியலின் மதி நுட்ப வழிகாட்டி!

1.
வாராய்! வாராய்!
வாசல் தேடிபாலா அண்ணலே!
உள்ளம் உருகி நோகுதே!
உயிரும் வருந்தி பாடுதே!
பாடும் பாடல் கேட்குதா? (வாராய்!)

ஈழம் என்னும் மூச்சிலும்
அறிவு கொண்ட பேச்சிலும்
அன்பில் என்றும் வாழ்ந்திடும் உள்ளம் நீரே பாலா!
உலக அரங்க காற்றிலும்
ஈழத் தமிழர் வீட்டிலும்
உந்தன் குரலே கேட்டதே! மறக்குமோ பாலா?
பல அர்த்தம் தந்த சின்னமே!
உறவான பால சிங்கமே!
மீண்டும் எழுந்து வாராயோ? (வாராய்!)

ஆழம் கொண்ட ஞானியாய்!
அண்ணன் அருகில் தோழனாய்!
உறவில் என்றும் நிலைத்திடும் எண்ணம் நீரே பாலா!
வீரம் பிறக்கும் நாட்டிலும்
ஈழத் தமிழின் ஏட்டிலும்
நித்தம் முகமே பூக்குதே!உறக்கமோ பாலா?
உலவி வந்த சந்தமே!
உறுமி வென்ற தமிழ்ச் சிங்மே!
மீண்டும் பிறந்து வாராயோ?(வாராய்!)

17.12.06


2.
பாலா அண்ணா! பாலா அண்ணா!
அரசியல் மன்னா!! எங்கள் பாலா அண்ணா!
அன்போடே உமையழைத்தோம்
அருகிருந்தே அறிவுதந்தீர்
அழவைத்தே மறைந்தீரோ? (பாலா அண்ணா)

தணியாத தாகம் கொண்டு தமிழீழ கீதம் பாடிடவே!
தமிழின தத்துவ அரசியல் ஞானக் குயிலே!
உயர் வானில் உலவி வந்த அறிவு நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

புரியாத சோகம் தந்து
விழி சிந்தும் ஈரம் தந்துதேம்ப வைத்தே சென்றீரோ?
தமிழன்னைத் தாலாட்டில் உறங்குகிறீரோ??
இருள் நீக்க வானம் தந்தஈழ நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

உம் முகமே நினைவு வரும்
நினைத்து நினைத்து அழுகை வரும்
உம் வாக்கு தந்த வீரத்திலே!
உயிர்த்து உயிர்த்து மனமிங்கே உரமாகும்
உரமாகி உரமாகி தமிழீழம் உருவாகும்
வாவா அண்ணா! அன்று பாலா அண்ணா!! (பாலா அண்ணா)

16.12.06

தமிழீழ விடுதலைப் பாதையில்,
தமிழின வரலாற்றின் அரசியல்,
வெற்றிப் பயணத்தின் மதிநுட்ப வழிகாட்டி!

தமிழின விடியலின் மதி ஒளிகாட்டி!
உலகத்தமிழினத்தின் உயிராழத்தில்
மாறாத முகமுமாய்,
மங்காத குரலொலியுமாய்
வாழ்ந்து கொண்டேயிருப்பீர்கள் மதி அகம்காட்டி!

14-12.06.


3.
ஏற்குமோ?
தமிழின உளமது ஏற்குமோ?
மதிமுகமே! மறந்து போகுமோ?
தேசமே தாங்குமோ?
அறிவாலமரமே! பாலாண்ணையே!
மனமெங்கும் குரலொலியே! தமிழ் மனதார மொழியிலையே! - அந்த மதிப் பயண வழியில்லையே! ( ஏற்குமோ)

தலைவனின் அருகினில்
அரசியல் ஒளிகாட்டி!
தமிழின விடியலின்
மதிநுட்ப வழிகாட்டி!
பேச்சுக் களங்களின் தடை நீக்கி - விடுதலை
வீச்சுக் களங்களில் உணர்வூக்கி
எதிரிக்கு அரசியல் எரிமலையே!
ஓய்ந்துபோனதோ அறிவலையே! (ஏற்குமோ)

மலையென மதியினில்
விடுதலைச் சுடரேற்றி!
உடையினில் பேச்சு
நடையினில் எளிதேற்றி!
உலகத் தமிழின உள்ளத்து உறவாகி - வேதனை
தந்திங்கே போனதெங்கே!
எத்திக்கும் மௌனமாய் ஆனதிங்கே!சாய்ந்துபோனதோ? அறிவுச்சரித்திரமே! (ஏற்குமோ)
14.12.06.


4.
ஞானக்குயிலே!தேசக்குரலே!!
பாலா அண்ணா! பாலா அண்ணா!
அரசியல் மன்னா!!
எங்கள் பாலா அண்ணா!

அன்போடே உமையழைத்தோம்
அருகிருந்தே அறிவுதந்தீர்
அழவைத்தே மறைந்தீரோ? (பாலா அண்ணா)த
ணியாத தாகம் கொண்டு தமிழீழ கீதம் பாடிடவே!
தமிழின தத்துவ அரசியல் ஞானக் குயிலே!
உயர் வானில் உலவி வந்த
அறிவு நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

புரியாத சோகம் தந்து
விழி சிந்தும் ஈரம் தந்து
தேம்ப வைத்தே சென்றீரோ?
தமிழன்னைத் தாலாட்டில் உறங்குகிறீரோ??
இருள் நீக்க வானம் தந்த
ஈழ நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

உம் முகமே நினைவு வரும்
நினைத்து நினைத்து அழுகை வரும்
உம் வாக்கு தந்த வீரத்திலே!உயிர்த்து உயிர்த்து மனமிங்கே உரமாகும்
உரமாகி உரமாகி தமிழீழம் உருவாகும்
வாவா அண்ணா! அன்று பாலா அண்ணா!!(பாலா அண்ணா).16.12.06



5.
மாமணியே!
மனித மாணிக்கமே!
தேசத்தின் குரலே!
சர்வதேசத்தில் தமிழர்க்காய் முழங்கிய சங்கே!
உள்ளமெல்லாம் உச்சரிக்கும் அண்ணா பாலா! - நீரே
உயர்வானமிங்கு வந்துதிக்கும் அறிவு நிலா!
உமது பேச்சென்றும் இனிக்கும் பலா!
பாலா அண்ணன் எனும் நாமம்
காலம் போனாலும் போனாலும் மறையாதது.

சகாப்தம் படைத்த சானக்கியரே!
சகா வரம் பெற்ற அறிவொளியே!
வீசும் காற்றுப் போல்! ஒளிக் கீற்றுப் போல்!
என்றும் நிலைத்த நித்தியமே!

மாபெரும் மனித மாணிக்கமே! - தமிழ்
மண்ணில் உதித்த மாமணியே!
மங்காப் புகழ் பூத்த அறிவுச் சுடர்விளக்கே!
தமிழின வானில் அம்புலி!
தரணியில் தத்துவ அரசியல் அறிவுப்புலி!
தலைவன் அருகில் அரசியல் ஒளிகாட்டி!
தமிழின விடியலின் மதி நுட்ப வழிகாட்டி!
அரசியல் தத்துவமே!
அறிவியல் புத்தகமே!
அன்பெனும் பெட்டகமே!
ஈழமணி நாட்டினிலே தீராத தாகம் கொண்டீர்!
வீரத் தமிழ் தலைவன் அருகில் மாறாது நின்றீர்!
அரசியல் ஞானியே! அறிவு ஏணியே!
தமழர் நம் நெஞ்சிலே நினைவாகி நிலைத்தீரே!



6.
மதிபாலா மறையவில்லை - மனங்களிலே!
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

கதிகாலம் அழைத்ததென்பீரோ?
விதியாலம் செய்ததென்பீரோ? மதிஞானியே!
எழுத்து வரிக் காதலனே! - எழுத்துலகில்
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

பேச்சினிலும் பேனா வீச்சினிலும் - உமது
மூச்சினிலும்தத்துவமே! தமிழீழமே!
கண்ணாடி அணிந்தே - நம்முன்னாடி நிற்கின்றீர்
குறுந்தாடி முகவழகே!மலர்ந்தீரே!
மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

வரிப்புலிதான் வீழ்வதில்லை
வரலாறாய் எழுகின்றார்.
தேசத்தின் குரலே! தேசப் புகழே! - நம்
உயிரெல்லாம் முளைக்கின்றீர்!
பிறப்பாகி பிறப்பாகி
புதுப் பிறப்பாகி உயிர்கின்றீர்!
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)



'தேசத்தின்குரல்' நினைவு சுமந்து.
சு.பா.ஈஸ்வரதாசன் .

Wednesday, 18 June 2008

உயிர்குள் முளைத்தவை...


என்னைத் துளைத்து எனக்குள் விதைத்து உயிர்குள் முளைத்தவை...

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள்பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையென பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வேன் என்று
நினைத்தாயோ???

-பாரதியார்

----

கி.ஆ.பெ.விசுவநாதம்;


பொது நலத்துக்கு உழைக்கும் அறிஞர்களை
தன்னலத்துக்கு உழைப்பவர்கள் விரைவில் வென்று விடுவார்கள்.
முன்னது - ஆற்றின் ஊற்று நீர் போன்றது.
பின்னது - காட்டாற்றில் பெருகி வரும் வெள்ளம் போன்றது.

----
குறள்

49.காலம் அறிதல்

'ஞாலங் கருதினுங் கைகூடும் - காலம் கருதி இடத்தாற் செயின் -484.
'காலங் கருதி இருப்பர் - கலங்காது ஞாலங் கருது பவர்' -485

74. நாடு

'பிணியின்மை செல்வம் விளைவின்பம் - ஏமம் அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து' -738

ஈசன் மொழிகள்

'நாமெல்லாம் படைக்கப் பிறந்தவர்கள்'
-----
'எழுத்துயர படைப்பு
உயரும்
படைப்புயர சமூகம்
உயரும்'
---
ஒருமுறை..
ஒன்று சொல்வேன்.
ஒரு முறை மலரும் மலர் போல்
மொட்டவிழும் ஒருமுறை பெண்மை.
தொட்டவிழும் ஒருமுறை தாய்மை.
கண்கள் பேசியோ? பேசாமலோ?
காதல் ஒரு முறை
.24.12.02
--------

'எல்லாத் தரப்பினரும் நல்ல வாசிப்பாளர்களாக இருந்தால்
உலகே உயர்ந்துவிடும்.'

---------

'பிறப்பின் மகிமை புனிதமானது என்பதை நிரூபித்திட்ட
நன்நாளை நினைத்து நாமெல்லாம் மகிழ்ந்திருப்போம்.'

-------

அமைதியை நாடும் மனம்

ஆறுதல் தேடும் இடம்

ஏதோ மனிதச் சத்தங்கள் பொறுக்கும். 23.09.00

------
தவறியவை தவறியவையே!

தடுமாற்றம் என்பது இருந்துவிட்டால்
தவறுதலுக்கு தப்ப முடிவதில்லை.
தப்புதல் என்பது?
தப்பாகாது எனச் சொல்வதற்கு இல்லை.
13.09.00
-----

காதல் மொழி.
சின்ன சின்ன பார்வைகள் போதும்
சிரித்த கண்கள் பூசுதல் போதும்
எந்தன் மனதை திருடிக்கொண்டதுமில்லாமல்
இல்லை என்று பொய்யும் சொல்வது
பெண்மையின் உண்மையோ?
--------

Monday, 16 June 2008

.

மலர்வுடன்..

இனிதே
அக, முகம் இருந்து விட்டால்
மகிழ்ந்திடும் வாழ்வே!

வையத்தின்
வாழவுதனில்
நம்மினத்தின் உயரம்தான் என்ன?
முகமில்லா உடலம்தான்
முண்டமென ஆகிவிடும்

மனதின்கண் பேசுமொழி,
பிறந்தமண் நுகரும்நாசி
செவிதனில் விழுந்திடாதா?
என் தேசமதின் சுதந்திர ராகம்.

விடியும், விடியும்
என்று
விளக்குகளை நாமேஅணைத்தால்…

சுடர் விடும் சூரியனே
இடர் துடைத்தே
எழுந்திட்டே வா!
ஆழமது வேர் விட்டு
இரும்புடைக்கும்
‘சுதந்திரம்’
மலர்வுடன்.

-அருவி1- ஊற்று8 -2002 பிரதமஆசிரியர் என் பதிவு.










.

புலர்வுடன்..

விழித்துக் கொண்டால்
போதாது.
செழித்து விடவேண்டும்
வாழ்வு என்றால்,
சலியாத கடின செயற்பாடு முதல்,
நம்பிக்கை வைத்தே
நடைபோட வேண்டும்.
துன்பங்கள் கண்டு
துவண்டிட வேண்டாம்.
எத்தனை காலம்தான்
சொன்னோம் இதை
நம்மில் யார்தான்
விழிப்புற்றோம்?.

மொழி புரியா சோகங்களை
செவி கேட்டு அழுதது.?

சுதந்திரத்தில் கைவைத்தால்
சுவாசம் சுகமாகுமோ?

பேசுவது ஒன்றும் - பின்
பூசுவதும் ஒன்றுமாய்
மனிதரில் சில விசங்கள்..
இவை மாறிடாதா இங்கே?

நிமிடங்கள்,
நினைவுகள் தெளிவானால்
வெற்றி வாழ்வு
புலர்வுடன்.

- அருவி1 –ஊற்று9-2002 பிரதமஆசிரியர்- என் பதிவு

.

மூச்சு இழந்து விடவில்லை

இனமே!
இளைத்துவிட்டாயா?
இடம்மாறி, இடம்மாறி
இடம்மாறிய நிகழ்வுகளால் - நீ
இளைத்துவிட்டாயா?
உதைபட்டு, உதைபட்டு
உருண்டு நெளிந்து
இதைவிட
இனியென்னஇடமாற்றம்?
அது ஒரு காலம்!
தொடர்ந்ததும் தொடர்வதும்
உன்னால் தானாம்
இனி வரும் காலம்
உன் கையில் என்கிறது
காற்று
‘காற்று இன்னும் மூச்சு இழந்து விடவில்லை’
காலம் சொல்லிற்று!
'ஈழமுரசு’ வில் வெளியாகியது.

Sunday, 8 June 2008

நினைவுடன்…

நினைவுடன்…

என்றும் வாழ்வோம்
இது நிலைக்கவே,
மண்ணில் வாழ்வுக்கு
வாழவேண்டும்.

மூச்சு நிரப்பிவிட்ட
உயிர்ப்பை
பேச்சும் கற்றுபின்
ஏதேதோ ஆகி
காத்துப் போகும்காலம்
எது என்று
புரியாத உலகம்.

இதில்
மற்றவர் வாழ
வழிதந்தார் ஒரு சிலரே!
தாமும் வாழார்,
தள்ளியிருப்பவரும்
வாழ தள்ளி இரார்.

அழியும் தேகம்,
தெரியும்
ஆனாலும்
நாளும் கேடாய் வேசமிடும்.

பாரும் ஒரு சேதி!
பிறந்த பின் வாழ்வதும்
இறந்த பின் வாழ்வதும்
அவரவர்
சுயமான,
நினைவுடன்..

மார்கழி 2002 – ஊற்று 10 – அருவி1 – பிரதம ஆசிரியர். என் பதிவு.

.


உறுதியுடன்....
இணைகின்ற பயணம்..

… இமைக்கின்ற,
நடக்கின்ற, போதெல்லாம்
காலங்கள் நம்மைவிட்டு
கடக்கின்றது.

எவ்வளவு காலம்தான்
நாமே நம்மைப்பற்றி
குறை சொல்லிக்கொண்டே…

இதுவே
நமது வளர்ச்சிக்குதடையாக
இருக்குமல்லவா?

தனித்
தனியே ஒரு யாகம்
நமக்குள் நடக்கட்டும்.

தூய்மையான
உயிர்களின் நடமாட்டம்
நன்மையானதே! பூமி மகிழும்.

கவியரசரின் வரிகள் போல்
(போற்றுவோர் போற்றட்டும்…)
என்றும்
உறுதியுடன்.

பங்குனி 2002 -அருவி1 -ஊற்று3- அருவி பத்திரிகையின் பிரதம ஆசியர். என் பதிவு

மின்னலை விழுங்கியவன்.


மின்னலை விழுங்கியவன்
மண்ணுலக மகாமனிதன்
என்னை உயிர்ப்பித்தவன்
என் மனதில் நிலையானான்
பார் அதி யார்?

மாகவி சுப்பிரமணியபாரதி.

Saturday, 7 June 2008

இரண்டாயிரத்து இருபது

இரண்டாயிரத்து இருபது
2020
THAMIZHEEZHAM
கனவு
பார்வை
நேசமுடன் சு.பா.ஈஸ்வரதாசன்.
விடுதலை பெற்று விட்ட
தமிழீழம்
2020 ல்
எப்படி இருக்கும்.
நிச்சயம் நிகழும்.
ஒரு காலைக் கனவு

Thursday, 22 May 2008

பிரசுரமானவை.





1.
இனித் தமிழிசை பாடவந்தேன்.
என் நாமம் தமிழ் வைத்தேன்.
இனி நான் எழுத்தில் தூங்கிடிலேன்.

பிறந்த மண்ணின் சுகம் மறந்திடேன்.
மறுபடியும்தேசம்
செல்ல வழி சொல்வேன் - வழி செல்வேன்.

காசுழைத்தும்
கடன் தீரா வாழ்வு கண்டேன் இங்கே!
மாசுபட்டு போயிடுமோ மனித வாழ்விங்கே!
தேசம் விட்ட வாழ்வும்,
தேகம் விட்டு உயிர் வாழும் அங்கே!
அதிலே நான் கண்டேன் இன்பம்.

பழங்கதை
கவிதை
சொன்னதை நான் சொல்லவில்லை
உலகறந்ததாம் நம்கதை.

ஊரில் அடிபட்டோம் ஏனோ உருப்பட்டோமா?
தேரிலா ஏறி தெருதாண்டி
ஊர்விட்டு உலகின் மேற்கு வந்தோம்.
நாயிலும் கேடாய்
பாயிலும் இல்லா படுக்கை.

நெஞ்சத்தை தொட்டுச் சொல் நிம்மதியாமோ?

காயும் நிலவும்,
பாயும் நதியும்,
வீசும் காற்றும்,
பேசும் தென்னம் கீற்றும்
பெண்ணும் கண்ணும்
இன்னும்
ஏதேதோ சொன்னேன்.
கவலை கட்டுண்டு உள்ளம் கிடந்தது.

மாறிவந்தோம்
மானம் வித்தோம்
மறுபடியும் வாழ்வு வர இங்காவது
உறவு கொள்வோம்.

சாதி விட்டாச்சு என்று பேச்சேயொழிய
முழுதாய் எரியலையே! – பெண்
சாதி அடிமை மொழிவிட்டாலும் அடிமதில் காயலையே?.
இவரைத்தேடிப்பிடி ஏறிமிதி
தாய்ப்பால் வெளிவரட்டும்.

சாதிவெறி பெண்ணடிமை சாம்பராகட்டும்.
0000000000000000000000000000
அருவி பத்திரிகை - என் பதிவு
0000000000000000000000000000

வானொலிக்கலையும் இன அடையாளமும்.



-------------------------------------------------------------

வானொலிக்கலையும் இன அடையாளமும்.



இது புதுயுக உலகு வாழ்வியல். வேகமான காலச்சுழற்ச்சி. நவீன தொழில் நுட்ப நுன்னியல் சுழல் வேக வளர்ச்சி. இவ் உலக வாழ்வியலில் ஒவ்வொரு தனிமனிதனும் ஏதோ ஒன்றுக்காக என்னவெல்லாம் இழந்தும் இழக்க விருப்பமின்றியும் அத்தோடு காலத்தின் பறிப்பும் வழங்கலுமாக பிறப்பு - வாழ்வு - வாழ்வுக்கான போராட்டம் - உறவு - இறப்பு என சுழலும் உலகச்சக்கரத்தில் மனிதம். இதில் தொடர்பூடகவியல் என்பது மனித வாழ்வியலுக்குள் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்கவே முடியாதது ஆகிறது. தொடர்பூட கவியலில் வளர்ச்சியானது அதிசயத்தில் ஆச்சரியத்தில் அசுர வேகத்துடன் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

தனியே நான் என்று இல்லாமல் குடும்பம் - சமூகம் - நாடு - சர்வதேசம் என பரந்து விரிந்து செல்கிறது. வெகுசனத்தொடர்பு சாதனத்துறையில் இலத்திரனியல் ஊடகம் பதிப்பு ஊடகம் என பல்துறை ஊடகப் போக்கு நிலை என்பது அதன் தனிப் போக்கில் பற்பல தொழில் நுட்ப மற்றும் மனிதவலு அறிவு நுனுக்கத் திட்ட மிடல்களை உள்ளடக்கி வெளி வருகின்றன வெளிப்படுத்துகின்றன.

சனரஞ்சகமான போக்கு நிலையானது நவீனக் கலைகளின் வளர்ச்சியினோடு காலப் போக்கின் தன்மைகளுக்கேற்ப மாறி மாறிக் கொண்டே செல்கிறது. வேகமான ஓய்வற்ற வாழ்வியலில் சிக்கித்தவிக்கும் மனிதனாகிவிட்டான் இக்கால மனிதன். அதனால் உறவியல் பண்பு நிலைகளும் தம் போக்கிலே மாற்று நிலைகளுக்குள் வழிமாறிப்போகும் நிலைகாணப்படுகிறது. அறிவியல் வளர்ச்சியின் வெற்றியில் உலகு நிகழ்வுகளை இப்போ விரல்களுக்குள் நர்த்தனமாட வைக்கும் வளர்ச்சியின் உச்சப் போக்கில் வளர்கிறது.இந்நிலை எங்கு எதில்தான் போய் முடியுமோ? என ஓர் அச்சமும் ஆட் கொண்ட வண்ணமே உலகு பயணிக்கிறது.

உலகில் எங்கு என்ன நிகழ்ந்தாலும் அதனை கைக்குள்ளே பெறக்கூடிய தகவல் பரிமாற்றத் துறையானது வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றுள் ஆரம்ப காலந்தொட்டு வானொலிக்கலை என்றுமே மாறாத் தன்மையுடன் தொடர்பூடகமாக வெற்றி கொண்டு பலவித சவால்களுக்கும் போட்டிகளுக்கும் முகம் கொடுத்து வளர்ந்த வண்ணமேயிருக்கிறது.

முறையான கொள்கைத் திட்டமிடலுடன் கூடிய நிர்வாகக் கட்டமைப்பு அதனூடான ஒழுங்கமைப்பு உண்மை நேர்மைப்போக்கு பொதுநலசிந்தை தனித்தரம்பேணல் என பல விடயங்களை கருத்தில் எடுத்து பயணிக்கும்போது எந்த விடயமும் வெற்றி பெறத்தவறாது. வானொலிக் கலைக்கும் இது பொருந்தும். பல் துறைப் புலமை நிறைந்த சாதனம் வானொலி என்றால் அது மிகையாகாது. ஓர் இன அடையாளத்துக்கும் அதன் தேவைக்கும் பாதுகாப்புக்கும் பங்களித்து நிற்கிறது.

ஒரு இனம் அதன் அடையாளம் எனும் போது தொடர்பியல, பண்பாடு, கலை, கலாச்சாரம், இலக்கியம், மொழி, பரம்பல், பாரம்பரியம், கல்வெட்டு, தொல்பொருள், தொண்மை, தோற்றம், … என ஆழ வேறோடிச்சென்று விளைபொருள் தேடுகிறது.

ஒரு மொழித்தொடர்பு என்பது அத்தியாவசியமாகிறது. அது தனி இன அடையாளத்திற்கு சாட்சியாகிறது. மிக முக்கிய உயிர்த்தன்மை வகிக்கிறது. இன்றைய உலகத தன்மையில் நிலையில் இனஅடையாளம் எனும் கண்ணோட்டமும் அதற்குரிய மிகவேகமான வளர்ச்சிக்கான செயற்பாடும் முக்கியமான மிகமிக ஆழமானதாக அமையவேண்டியது அவசியம் எனக்கொள்ளலாம். பிரிவு நிலைப்போக்கு அதிகரித்துத்துச் செல்லும் மனிதப் பண்பியலாகி விரிந்து செல்லுகிறது. காலச்சூழல் அதற்கு காரணங்களாகி கட்டியம் கூறி நிற்கிறது.

சுதந்திரமான கெளரவமான சுய உரிமைகளைக் கொண்ட வாழ்வையே மனிதம் எதிர்பார்த்து வேண்டி நிற்கிறது. இந்த மனிதநேய சிந்தனைகளை யெல்லாம் முன்னர் வேண்டிப் போராடி வெற்றி பெற்று வாழ்கின்ற இனங்கள். அவையே மற்றைய இனங்களை சுரண்டி, அடக்கி, ஆக்கிரமித்து,அழித்துவிட பயங்கரப் பேரலையாய, வல்லாதிக்கமாய், நயவஞ்சக சூழ்ச்சித் திட்டங்களை, குழிகளை ஏற்படுத்தி, பல கூட்டுக்களை உருவாக்கி சிக்கவைத்த,> படுத்தாத பாடுகளை அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டு பாரம்பரிய வரலாற்றுத் தொண்மைமிக்க மனிதப்பிறப்பியல் முன்னோடி இனங்களை இல்லாதொழிக்க கங்கனம் கட்டி நிற்கின்றன.

இனம் அதன் அடையாளங்களை கொண்டிருப்பது மிகவும் தேவையானதல்லவா?

அடையாள இழப்பும், அதற்கான பொறிகளுக்குள் வீழ்தலும் ஒரு வித இன அழிவுக்கு துணை போதலே எனலாம். மனித இனமே எத்தனை வகையாகிப் போகிறது. உட்பிரிவுகள் உருவாகி அவை வகை வகை யாகிக்கொண்டே போதலும் ஆபத்தானதுதானே.

எனவே இந்த வல்லாதிக்கங்களை வெற்றி கொண்டு சுதந்திரமான, சுய வாழ்வியலுக்கான சுய போராட்டங்களை வீறுடன் தொடுத்து எந்தவித கருத்தியல் சொல்லாடல்களுக்கும், வல்லாயுத அடக்கு முறைகளுக்கும், சுழற் புயல்களுக்கும், சுனாமிகளுக்கும், பயந்துவிடாமல் மிடுக்குடன் எழுந்து அதன் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும்.

ஆண் - பெண் மனித பண்பியல் வித்தியாச அடிப்படைக்கு கருத்தியலில் மாற்றமில்லை. ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்தாத சம நிலையே மனித மேம்பாட்டுக்கு தேவயானது. இன உட்கட்டுமானத்தில் ஏற்ற இறக்க தன்மைகள் முற்றிலுமற்ற சமத்துவ அறிவியல் வளர்முகமே இனப் பலத்துக்கு உறுதி பேணலுக்கும் பாதுகாப்பானதுமாகும் ஓர் இனத்தின அதன் மொழி வளர்ச்சியில் இன அடையாளத்தை பேணிப் பாதுகாப்பதில் வானொலிக்கலையின் பங்கெடுப்பு உன்னதமானது.

பாரம்பரியம் - தகவல் - பொழுதுபோக்கு - கல்வி என அதன்பங்கு பல்கிப்பெருகி சமூக வளர்ச்சி மாற்றத்துக்கு வழி அமைத்துக்கொள்கிறது. அலைவழித் தொடர்பினூடே பொதுநிலைக்குள் வரவேற்று, கருத்துநிலை, மகிழ்வூட்டல் நிலை,வெளிப்படுத்தல் அனுகுமுறையுடன், கேட்போரின் உணர்வு, எண்ணம், அனுபவம், என்பவற்றின் உள்வாங்கலினாலும், சமூக வாழ்வியலின் தேவைகளை, தேடல்களை சொல்வோர் - கேட்போர் - பதில் சிந்திப்போர் என பங்கிட்டுகொள்ளும் உறவுநிலைப் பண்பை, தன்மையை கொண்டு பிரசித்தம் பெறுகிறது. தொடர்பூடகத் தொடர்பற்று வாழ்தலென்னபது சாத்தியமற்றது.ஆகவே தொடர்பூடகப் பயிற்சி என்பதை ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் பெற்றேயிருக்க வேண்டிய தேவையாகவும், தெரிந்திருத்தலும் அவசியமாகிப்போகிறது. அவற்றின் நுட்பங்களை அறிந்திராதவர்கள் இல்லையென்றே கூறலாம்.

சமூக மட்டத்தில் அறிஞர்கள், கல்விமான்கள், கலைஞர்கள், சேவையாளர்கள் என விரிகின்ற பொறுப்பு ணர்வாளர்களுக்கு வழிதரும் ஓர் அரிய ஊடகம் வானொலி. வானொலிக்கலை.

அடக்கு முறைகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராக களத்தில் நின்று துணிவுடனே வெற்றிகண்டு செல்கின்ற பன்முக வளர்ச்சியோடு இருக்கக் கூடிய வளத்தன்மைகளை விருத்திசெய்து சரியான வழிகாட்டலில் உருவாகும் தாயகம். அதில் வானொலிக் கலையில் உயரிய நவீன உலகுக்கு ஈடுகொடுத்துள்ள வளர்முறை.

கல்வி, தொழில் சார்பிலும், உயிரபாய பாதுகாப்புத்தேடலுக்காவும், விரும்பியும் விரும்பாமலும் காலக் கட்டாயத்திலும் புலம்பெயர்ந்து பல்லின கலை, கலாச்சார, சமூக. மொழிப் பண்பாடுகளுக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டுபோகாமல், இன அடையாளப் பண்பாட்டு விழுமியங்களை முழு மூச்சுடனும், வீச்சுடனும், தக்கவைத்து, அடுத்தடுத்த தலைமுறைகளை சரியான பாதையில் இட்டுச்செல்வதற்கும், முனைப்புடன், தாயகம், தாய்மொழி, தனித்துவப் பாரம்பரியம் என்பவற்றையும் கட்டிக்காத்தும், தொடர் சந்ததிக்கு அவை சென்றடைந்து அவை அழியாது பாதுகாக்க துணிவுடன் நடைபோடுகின்ற பன்முக வளர்ச்சி தொடர்கிறது.
இந் நிலையிலிருந்து இன அடையாளப் பேணலுக்கான படிமாணக் கட்டு மானங்களை உருவாக்கி, விஸ்தரித்து, செயற்படுத்தி வெற்றி காணுதலும் சவால்.
அத்தோடு மட்டுமல்லாமல் இனத் திற்குள்ளேயான எதிர் நிலை முரணான தேவையற்ற பிரிவு நிலைப் போக்கு என் பவற்றையும் எதிர்த்து நின்று போராட வேண்டிய பலமான ஒற்றுமை தேவைப்படுகிறது. ஒன்றிணைந்த ஒரே இனம் என்ற தன்மை இங்கேதான் பிறக்கிறது. அதற்கான பலமான ஓர் உறவுப்பாலமாக பங்கெடுத்து வானொலி செயற்படுகிறுது என்பது கண்கூடு.வானொலிக் கலையின் தேவை உணரக்கூடியதாகவே உள்ளது.

உயர்தரத்துடன் விற்பன்னத்துவம் நிறைந்ததாகவும் கேட்போருக்கு விடயங்கள் கொண்டு செல்லப் படுவதனால் சமூகத்தின் ஓர் அங்கமாகி சங்கமித்து நிலை பெறுகிறது.அதிதொழில் நுட்பமும்> பல்துறை நுட்ப அறிவுசார் மனிதவலுத் தேவையும் ஏற்படுகிறது. கற்றல் - அதனால் ஆய பயன் என்ன வென்றால் சரியான முறையான படைப்பாக்க வெளிப் பாட்டுடன் பகிர்ந்து கொள்ளல். அத்துடன் பொழுது போக்கான உக்த்திக் கையாள்கையுடனான மகிழ்ச்சிப் படுத்தலின் ஊடான ஒன்றுபடல்.

வானொலி அறிவுப்புக்கலை

எல்லோருடைய எண்ண வோட்டங்களும் சரியாக இருந்து விடக்கூடிய சூழலிலும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. வானொலிக்கலையில் பல்வித பிரிவு நிலைத் தன்மைகள் உண்டு பலவிரிவான விளங்கங்களினூடகப் பாக்க வேண்டும்.அத்தன்மைகளைப் விரிவாக இங்கு எடுத்துக் கூறல் சாத்தியப்படாதது.அதிலும் அனுபவமும், தேர்ச்சி நிலைப் பன்மைத்துவம் இருப்பது தனிச் சிறப்பியல்புகளை கொள்வதோடு, மதிக்கப்பட வேண்டியதும், காக்கப்பட வேண்டியதும், இனக் கடமைப்பாடாகும்.

அறிவிப்புக்கலை இதில் முக்கியமானதாகிறது. இக்கலை ஆர்வமுள்ளவர் மனவிருப்புடன் முழு ஈடுபாட்டுடன் செயற்பட ஆரம்பிக்கும் போது அறிவு, ஆற்றல், தேர்ச்சித்திறன்விருத்தி, நுட்பப்பாவனை, அதற்கான முயற்சி இடைவிடா பயிற்சி என்பன ஒருங்கு சேர பெற்றிருந்தால் இக்கலையில் பாரிய வெற்றிகளை சாதிக்க முடியும். எந்தவொரு விடயத்திலும் அக்கறை வெளிப்பாட்டுத் தன்மை, மற்றவர்களினூடான தொடர்பாடல் உறவு நிலையில் சரியான அனுகுமுறை, உறுதியான நம்பிக்கை கொண்ட மனத்திடம், சமூக விழிப்புணர்வுடனிருத்தல்,எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருத்தல், பதட்டமற்ற, பண்பான நிலையுடன் உண்மையுள்ளவராய் இருத்தல், ஏனையோர் கூறும் கருத்துக்களை ஆவுலுடன் கேட்பதுடன் அவர்களுடனான து}ய்மையான நட்புரையாடலை சுவாரஸ்யமான முறையில் கைக்கொள்வதும், ஈர்ப்புடன் கவருதலும் அறிவுப்புக்கலை பண்புகளில் சில எனலாம்.

சீர்திருத்தம் உள்ள சமூகக் கூட்டமைப்பினை உச்ச வளர்ச்சிக்கு வித்திட்டு, நீர்பாய்ச்சி, வளர்த்து பயன் தரக்கூடிய பணிகளில் ஈடுபடவைக்கக் கூடிய பொறுப்புணர்வு கொண்டவராகிறார்.

வானொலிக்கலையில்> அறிப்புக்கலையாளர்

சரியான தெரிவுசெய்த விடயத்தானத்தை விளக்கமாகவும், மொழி உச்சரிப்புத் தெளிவாகவும், சுருக்கமாகவும், பேசுதல், அறிவித்தல் மிக முக்கிய தொடர்பாடல் இலக்கணத்துடன் நடந்து கொள்ளல் மிக அவசியமானது. அத்தோடு எளிமையான முறையாக, நேடியாக விளங்கக் கூடிய மொழி நடையுடன்தொடர்பு படுதல் வேண்டும். நல்ல சொற்தெரிவுகளுடன் அவற்றைக் கொண்டு மன உறுதியுடன், துணிவுடன்,ஆற்றல் உடைய தொனியுடன் இனிய குரல் வெளிப்பாட்டுடன் கூறல் அறிவுப்புக்கலையாளரின் தனித்துவமிக்க பண்பெனக்கொள்க.

சரியான, நியாயமான, சமூக வளர்ச்சிக்கான, மனமாற்றம், செயல்மாற்றம் இவற்றுக்கான ஊக்குவிப்பே இதனுடைய இலக்காக் கொள்ளக்கூடியது. ஈர்ப்புடன் கூடிய உரையாடல்கலையூடான ஓர் து}ய ஐக்கியம் பேணல் என்பது நன் நிலையாகும். பெற்றுக் கொண்டதை, கற்றுக் கொண்டதை சரியான வடிவத்தெரிவுடன் வானொலிக்கலை நுட்பத்திற்கேற்ப கொடுத்து அதனூடான சித்தி எய்தல் என்பதும் அறிவுப்புக்கலை வெற்றியின் ஒரு படி. பெறுநரின் தேவையை முதலில் சரியாகப் புரிதல் அவசியம். அத்தியாவசியம். கூட்டுமொத்த முயற்சியூடான பயணமே வானொலி வளர்ச்சியின் அடிப்படை அத்திவாரம். கேட்பவர் ஒருவராக இருந்தாலும் அவரது பகிர்வு என்பது பலருக்கூடாக எடுத்துச் செல்லப்படும் போது அது இன்னும் பரந்து சென்று விடுகிறது. கொடுத்ததின் ஊடாக கிடைக்கப்பெறும் பின்னூட்டல் முக்கியமாக கவணிக்கப்பட வேண்டியது. அதன் தன்மைகளை அடையாளம் கண்டு சரியான பார்வையில் பிரித்து ஆராய்ந்து ஆய்வு செய்து அறிந்து மீண்டும் கொடுக்கப்படும் விடயத்தில் புதிய அக்கறை செலுத்துதல் பயணளிக்க வல்லது.


வானொலி நிகழ்ச்சித் தயாரிப்புக்கலை

பல விடயங்களை உள்ளடக்கியோஅல்லது ஒரு விடயத்தை முன்னிலைப் படுத்தியோ, அன்றி வேறுவடிவத் தொகுப்பை செப்பனிடுதலினூடே வளங்குவதில் பல தன்மை வெளிப்பர்டுகளைக் கொண்ட கலை நிகழ்ச்சித் தயாரிப்புக்கலை.

நிகழ்ச்சித்தயாரிப்புக்கலையாளர்,மற்றவர்களுக்கு விளங்கும் வண்ணம், தனது கற்றலை, வெளிப்பாட்டை வானொலிக்கலைக் குரிய பண்பு முறையில் அதற்கான சிறப்புக்களை அடிப்படையாக வைத்து ஒலிக்காட்சித் தொகுப்பாக்கி பல்வேறு நுட்பங்களை, கைத்திறனை, நிபுணத்துவங்களை கைக்கொண்டு படைப் பாக்கத்தினை வெளிப்படுத்தல் வேண்டும். பல வழிகளில் காண்பதை, கேட்பதை அதன் உண்மைத் தன்மைகளை அறிந்து வானொலித் தயாரிப்புக்கு உகந்த வகையில் சரிப்படுத்தி சரியான ஒலிச் சேர்க்கைகளை ஒலிப்பதிவுக்கு உள்ளாக்கி செப்பனிட்டு பொறுப்புணர்வோடு உருவாக்கும் பணி இதுவாகும்.இதில் அசட்டையீனம், சிறு கவலையீனக் குறைகளும் பல பிழையான விளைவுகளை தந்து விடக்கூடும். இவரும் அறிவுப்புக் கலையாளரின் பண்புகளைக் கொண்டிருத்தல் உச்சப் பயன்தரும்.



ஓலி - குரல் - இசை•



குரல்

விரும்பத்தக்க தனித்தன்மைகளைக் கொண்டு மொழி உச்சரிப்புடன் தெளிவாகவும்> கம்பீரமான தொனி அழகுடனும் விடயம் அர்த்தபடுத்தலுடனும் கவர்ச்சியான ஈரப்புடன் இவை அனைத்தும் அடங்கிய குரல் வளம். முக்கியமாகப் பார்த்தால் குரல் ஊடே கேட்போரை குழப்பமின்றி - அதிரச்சியின்றி இரசிக்கக் கூடிய வகையில் குரல்களைப் பாவிக்கும் நுட்பம். சரியான குரல் பொருத்தமான விடயத்துக்கு பாவிக்கப்படுவதால் அவ் வொலிபரப்பலை வெற்றி பெறலாம். அறிவித்தல் மற்றும் ஏனை இன்னோரன்ன விடயங்களில் பல ஒலிவடிவத் தயாரிப்புக்கு குரல் பொருத்தம் என்பது வானொலிக்கலைக்கு உயிர் நாடியெனலாம். வானொலியில் ஒலிக்கும் குரல்களின் வித்தியாசம் தெரிகின்ற போதும் அந்த வானொலிப் பண்பின் நிமித்தம் அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒருவித ஒற்றுமையுடன் ஒரே பாங்கில் இருப்பது போன்ற ஒரு செவிப் பிரமை ஒரே அலைவரிசையில் கேட்போரிடத்தில் உருவாகுதல் இயல்பானது.


இசை


இசை வானொலிக் கலைக்கு மிகவும் முக்கியமானது. இக்கலை ஆரம்பம் முதல் என்றும் ஒட்டிப் பிறந்தது. இதனைப்பயன் படுத்தும் முறை, தன்மை, மாற்றங்கள் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டிருக்கிறது. வானொலி நிகழ்ச்சி மெருகூட்டல், அதன் தன்மைகளை வேறுபடுத்தல், கேட்போரை பரவசப் படுத்துதல், உற்சாகப் படுத்துதல், மனமகிழ்வு உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் என பயன் விரிகிறது. குறிப்பு இசையூடாக வானொலியின் நிகழ்ச்சசித் தன்மைகளை, நேரக் குறிப்புகளை வித்தியாசங்களை, தனித் தயாரிப்பு வேறுபாடுகளை கேட்போர் புரியும் வகையில் விளக்கம் கொடுக்கிறது. அதன் பாவனைக்கான பொருத்தப்பாடு சரியாகி கேட்போரை ஏதோ ஒரு வகையில் ஈர்த்துக் கொண்டு விட்டால் அதில் இசைவாக்கம் ஆகு நிலை உறுதி என்றாலே வெற்றியின் பங்கொன்று கிடைத்து விட்டது எனக் கொள்ளலாம். இசை பல்வேறு வழிகளிலும் வானொலிக்கலையில் தனிப் பங்காற்றுகிறது.

• ஓலி

வானொலி - இதில் ஒலி. இதுதானே அதன் வித்தையை ஒலி விந்தையை காட்டி வானொலிக்கலைக்கு உரம் சேர்ப்பது.பார்த்தல் - ஒரு தொடர்பாடல். இதுவே மனிதனில் அதிகளவு ஆதிக்கம் செலுத்துவது.அதற்கடுத்து கேட்டல் - இதுதான் முதலிடம் பிடிப்பது என வானொலிக் கலைக்காக சொல்லவில்லை உண்மையும் அதுதான். ஒலி பல கற்பனைகளை, மாற்றங்களை, தத்துரூபமாக எடுத்து விடயத்தானங்களை பிரித்துக் காட்டுவது. எனவே இதன் தெளிவென்பதே அதிமுக்கியம்.தொழில் நுட்பத்தடை, இரச்சல், எதிரொலி, இவை தடங்கல்களை ஏற்படுத்தும். பொருத்தமான இடத்தில் மிகச்சரியான முறையான ஒலிச்சேர்க்கையென்பது வானொலிக் கலைக்கு மேலும் பலம் சேர்ப்பது.கொடுப்போர் - கேட்போர்முன்னர் வாசித்த விடயங்கள் வானொலிக்கலையாளருக்கும், கேட்போருக்கும் இரு வழிச்சமம் பெற்ற விடயங்கள் எனலாம். இரு நிலையும் முக்கியமானது. இருகை ஓசை போல் இதன் செய்நிலை ஒலிக்க வேண்டும்.

கொடுப்போர்பற்றி பார்த்தோம்.

• கேட்போர்


தங்கள் தலையாய பணிகளுக்கிடையே இலகுவாக செவிமடுத்து தேவைகளை பெறும் ஓர் அரிய பொக்கிச வெளிப்பாட்டுப் பெட்டகமே வானொலி.தேவையானபோது செவிமடுக்கவும் விருப்பமில்லாதவிடத்து நிறுத்திக் கொள்ளும் உரிமையாளர் ஆகிறார். கேட்பதோடு நின்று விடாமல் அவற்றின் பின்னூட்டலை வழங்குதல் இரு வழித் தொடர்பு ஐக்கியத்தையும் அறிவுசார் வளர்ச்சிக்கும் வழிசமைக்கிறது.பங்கெடுக்க விரும்பும் கேட்போர் நேரடியாகவோ,பிரதிகள்டாகவோ, ஒலிப்பதிவு கடாகவோ விடயத்தானத்தை புரிந்து அதற்கான தெளிவு முறைத் தயாரிப்புக்களை மேற்கொண்டு தடங்கல்களை அகற்றி சரியான தொடர்பு வழிகளைக் கைக்கொண்டு மெருகூட்டுவதன் மூலம் இக்கலை சிறப்புறும். இன அடையாளப் பாதுகாப்பும் பலம் பெறும். பெரு வெற்றியை ஒருமித்து நிகழ்த்தலாம்.

கேட்போரின் துறைசார் - கல்விநிலை - வாழ்வியல் அனுபவப் பகிர்வும் சேர்ந்தே வானொலிக்கலை வளர்ந்து கொண்டே செல்கிறது. கொடுப்போரே கேட்போராகவும் கேட்போரே கொடுப்போராகவும் செயற்படு நிலை காணப்படுதல் வானொலிக் கலையின் இன அடையாள வெற்றி எனக்கொள்ளலாம்.

ஆகவே வளர்த்தெடுப்பதும்> பங்கெடுப்பதும் கேட்போர் உரிமையாகிறது. கேட்போருடன்; இணைந்த வாழ்வியலை அறிந்து, அவர்களை ஒருமுகப்படுத்தி எப்பொழுதும் நம்பகமான உண்மை நேர்மையுடன் நல்ல விடயங்களை கொடுத்தல் வானொலிக்கும் அதன் உயரிய வளர்ச்சிக்கும் உகந்தது.

வானொலிக்கலையையும் வளர்த்து இன அடையாளப் பாதுகாப்பிற்கும் தேசிய இன வளரச்சிக்கும் உரமிட்டு சுதந்திர வாழ்வுக்கு பலம் சேர்ப்போம்.-


நேசமுடன் சுபா.ஈஸ்வரதாசன்.

'அலை வனையும் உலகு'

Tuesday, 20 May 2008

தேசமே! வேதம்.

. தேடல். தேடல்என்பதுடன் - மனம்கூடல் கொண்டதால்நாடல் கண்டநடைமுறைகளின் வெளிப்பாடும்நாளைக்காலமும்நறுக்கென நினைவுகளில் வீழும்சுருக்குகள் முடிச்சவிழ்வதில்முன்நிற்கும் - ரமேஸ் வவுனியனின்கருக்கட்டியவைஇ மொத்தமும்கைதவழந்திடகைவருவதில்கைதொட்டுகையணைத்துமனம் மகிழ்ந்திட மகிழ்வு.
தேடல்வீட்டின் எங்கேயோ ஒரு முலையில்கூட்டில் குடிகொள்ளும்உணர்வின் ஓசைகளும்உலகின் எல்லையிலும்எல்லைவிhட்டு எங்கும் போகும்கற்பனையில் கடுகளவும்எங்கும் ஏங்கும் மனித நேயத்தின் மன அதிர்வுகளும்எல்லாவற்றையும் தாண்டிஅடி ஆழத்தில்தூரத்தே தெரியும்கிட்டத்து நிகழ்வுகளே!
'பிறந்து விட்டால் படைத்துவிடுஇறந்து விட்டாலும் பிறந்துவிடு'
( ரமேஸ் வவுனியன் அவர்களின் 'தேடல்' கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்ட நேசமடல். 2000 ஆண்டு)
2.வாலிபமே! வாழ்ந்துவிடு.
ஓ....வாலிபச் சிட்டுகளுக்காக சில வரிகள்..வாலிப நதியே!வழி தவறிப்பேவது ஏனோ?வாலிபத்தில் வாழ்ந்திட வேண்டிய நீவீழ்ந்திடலாகுமோ?
உன்சிறகுகளை போதைக்குள் சிறையிடாதே.சிந்தனைக்குள் அதையிடு.தேசத்துள் முளைவிடு.
மதுவுக்குள் மடிந்துமாதுவின் மயக்கத்தில் விழுந்துமரணிக்கவா நீ பிறந்தாய்?
வாலிபமே ! வாழ்ந்து விடு. வீழ்ந்து விடாதே!!!
(தமிழ்தாசனின்..'கசக்கி எறியப்பட்ட கடதாசிகள்...' கவித்தொகுப்பிலிருந்து..09.1996 ஜேர்மன் 'இளைஞன்' சஞ்சிகையில் வெளிவந்த கவிதை.)-----
தமிழ் மூச்செழுந்து எரிகிறது!
--------------------------------------------------------------------------------
வானம் கிழிந்தது!பூமிப்பந்தின் தமிழ் மூச்செழுந்து எரிகிறது!வெட்டிப்பேச்சும்இவெறும்பேச்சும்வெறுத்துப்போச்சு.குட்டிபோட்ட பூனையின் நிலையா நம் வாழ்வு?தட்டிக் கேட்கும் தன்மானக் குணம் எங்கே போச்சு?
கிட்டிபொல்லும் கிளித்தட்டும்கெந்திபிடித்த மணல் விளையாட்டும்குந்தியிருந்து வானத்து நிலாவுக்கு கூடிக்கொடுத்தமுற்றத்து முத்தமும்தென்னோலைக் கீற்று விரித்து பாக்குரலில் இடித்துக்கொண்டேபொக்கைவாய் பொன்னம்மாப்பாட்டி வாய் சிரித்து பாடிய காலங்கள் மறந்துபோச்சா?
வெள்ளுடை உடுத்திமெல்லநடை நடந்து பள்ளிபோனதும்பக்கத்து வாங்கு பகீரதனை பார்த்து நெளித்துபோனதும் நினைவிழந்தாச்சா?
தமிழ் வாத்தியார் பண்டிதர் ஈஸ்வரநாதபிள்ளை சொல்லிதந்த இலக்கியப்பாடம் இலக்கிழந்து போச்சா?
எகிறி எகிறி எத்தணித்தாலும்எல்லாம் மாறினாலும்என்னவோவெல்லாம் மறந்து போனாலும்தமிழ்க் குணமும்இவடிவமும்மாறிடாது.
பார் முகத்தை கண்ணாடியில் வடிவாய்ப்பார்.அப்போதாவது தெரியாவிட்டாலும்என்ன செய்ய? பார்த்தால்.வெட்கித் தலை குனியும்பார்.
தமிழைநேசித்தால் போதாதுதமிழ்வாழ தேசமன்றோ வேண்டும்.


விழிப்புடன்...
--------------------------------------------------------------------------------
விழிப்புடன்...வந்து வீழ்ந்துவிட்டபூமித்தாயின் மடியில்சிந்திய துளிகளில்சுகவாழ்வின் உச்சம் தேடும்விழிகள் விரித்துஉளம் சிரித்துஇலக்கு நோக்கிஎண்ணங்கள் ஓடும்.
தாய்மொழியுள்தேசத்துறவுள் - சொந்தம்ஆயுள் போயினும் கலந்திடும்.
முன்னும் முதுகின்பின்னும் அருகிலும்இ அகலமாய்விழிகள் விழித்திருக்கவிழிமூடித்தூங்கும் இரவுகள்சுகமான போதும்உலகும்-உலகுதாவியும்உலவ வேண்டும்மனக்கண்கள் விழிப்புடன்...

நட்புடன்...
--------------------------------------------------------------------------------
நாளையமகிழ்விற்கான இன்றையபார்வைகள்...மகிழ்வான உண்மை நேர்மை உழைப்புகொண்ட பயணங்கள்...தெளிவு கொண்ட தேடல்கள்...
'ஒரு முறை பிறப்புமறுமுறை வருகிலும்புரிந்திடாத் தன்மைகள்.
உடல் விட்டுப்போகும்உயிர் திசை தெரியாது.
இருந்ததில் பிறந்திடும்பிறந்தபின் இறந்திடும்முடிவுகள் தெரியா விடுகதைகள்.
எத்தனையில் போகும்எதில் போகும்விநாடிகள் புரியாத உயிர் நாடிகள்.பொருள் புரிந்தோமோ?
உனைக்கொன்று நான் வாழ்தலும் எனைக்கொன்று நீ வாழ்தலும்யாதும் பயனிலை.எழுவோம்செயற்படுவேம்பொருள் புரிந்துபுறப்படுவோம்.
('அருவி' சஞ்சிகை சித்திரை 2002 ல் எழுதப்பட்டது.)
துடிப்புடன்....
--------------------------------------------------------------------------------
துடிப்புடன்....உள்ளவைதான் உணர்வுள்ளவை. - அதிலும் மனிதம்அதுபோல நடிப்பவை ஏராளம்.அதனைத்தான்'நெஞ்சில் உரமுமின்றிநேர்மைத் திரனுமின்றிவஞ்சனை செய்வாரடி ....வாய்ச்சொல்லில் வீரரடி'பலருக்கே பொருந்தும்.
வலிமைமிக்க வரிகளைபார்வைகளினாலும் பழக்கத்தினாலும்பாடினார் மகாகவி.
முகங்களில் அழகு பூசி - அந்தேஅகங்களில் அழுக்குப்பாசிவார்த்தகைளோ வண்ணஜாலம்யாரோ உழைக்கயாரோ உண்டகதை.
அடக்குமுறைகள் அகலவிரித்துப்போட்டுக்கிடக்கின்றன. இதோ...முகமூடிகளுக்கு உரக்கச்சொல்வேன்....
காற்றையும் கட்டிப்போடலாம் ஆனால்உறுதியான உண்மைமிக்கஉணர்வுகளைமனிதநேய விழிப்புக்களைநெருங்கவே முடியாது.
என்றென்றும் மனிதநேயஉயிர்த் துடிப்புடன்.

('அருவி' 2002 ஆடி -ஆவணி)
காதலியே!
--------------------------------------------------------------------------------
விம்மி வெடிக்கிறது மனம்.உனை நினைக்கையிலே!
காதலியே!கன்னிக் கனவில் கலந்த காட்சிகள்பின்னிப்பிணைந்ததுபார்.எண்ணித்துடிக்குதே! ஏக்கம்தொடருதே!
கல்லிலும் காதல் தெரியுதடி!நெல்லு வயல்வெளியின் உயரே வானப் படுக்கையில்வண்ண ஓவியம் வரைந்த அந்த மாலைநெஞ்சுள் விரியுதடி!
உன் கண்ணில் எனைக்கரைத்தாய்உயிரில் உருகவைத்தாய்உனையே பருகவைத்தாய்.
'காதலியே!உனை நினைப்பதையே நினைக்கிறேன்உனை மறப்பதையே மறக்கிறேன்.'
ஓடை - 2
உருகுவதோ உள்ளம்!
'விழி அருகில் உதடுகள் வைத்தேன்மொழிகள் மறந்துபோய் மௌனமானேன்.ஏன்?என்னில் இத்தனை குழப்பங்கள்.தேன் இதழின் முத்தங்கள் பரிமாறும் உன் பார்வைகளில் நான் பாதியானேன்.'
'ம்ம்... இதற்கென்னமோ குறைச்சலில்லை..'
முறைத்துப் பார்த்தவளை இறுக்கிக்கொண்டான்.அவளின் மனதில் எத்தனை ஆனந்தம்.அவள் மட்டும் குறைந்தவளா என்ன?பதிலுக்கு பதில் அதில்தானே பரவசம்முத்தத்தில் ஒரு மகாயுத்தம்.
' போதும் பொன்மயிலே! உந்தன் மடிசாய ஆசை'வருணன் சொன்னதும்
நிலாமுகம் ஒளிவீசி புன்னகை பூத்தது.
'சாய்ந்து கொள்ள நீ இருந்தால் சத்தியமாய் உலகம் மறப்பேன்' வருணன்.
'............'
'விந்தியா ஏன் மௌனம்?இதற்கு பதில் இல்லையா?இல்லாவிட்டால்இ பெண்களே பேசும் மொழிஎன்பதால் மௌனமா?'
'என்னது பெண்களெல்லாம்...?அனுபவமோ? அதுதானே பார்த்தேன்பொய்யிலோ புலமை பெற்றவரோ?'
'என்னவளே! மேகங்கள் உரசுவதால்தான்மின்னல் வருகிறது.உந்தன் விழிகளில் படும் என் பார்வைகள்ஏனோ தோற்றுப்போகின்றன.?'
'மழுப்புவதில் மன்னர் போலும்'
கட்டிக்கொண்டான்.கன்னத்தில் முத்தமிட்டான்
'அடியே! நீ இன்றி ஒரு அணுவும் அசையாது காதலில்..... நனைந்தேன்.'இது என்னுள் ஏதோ சொல்லிற்று....'
பதிலுக்கு அவளும் இறுக்கிக் கொண்டாள்.இன்னும் இறுகிக் கொண்டாள்.
' இறவாத அன்பு வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்உனை என்றும் மறவாது வேண்டும்'
மனதுக்குள் பாடிக்கொண்டான்.உலகம் மறந்து போனது.
காதலின் கட்டில் பாடம் ஆரம்பமாகிறது.

-----('அருவி' வைகாசி 2002 )__________________ஓடை - 3
கண்களுக்கு!

முத்தமிட்டனமுதல் சந்திப்பாய்கடதாசியும் பேனாவும்.
'எத்தனை காலமும்எண்ணம் சொல்வதுகண்களே காதல் என்று.
முட்டியும்இமோதியும்விழிகள்வெட்டியும் - உதிரம் ஓடாஉணர்வான மோதல்.கட்டியும் போடாதுகெட்டியாய் பிடித்திடும்'
- கவிதை எழுதுகிறோம்
என்ற நினைப்பில்எழுதிய கடதாசிகளை கசக்கிஎறிந்தான் மாறன்.
மீண்டும்....
'கசக்கி எறியப்பட்ட கடதாசிகள்'
கண்களின் பார்வைகள்கசக்கி எறிந்தன.
கண்களில் மயங்கியவர் யாவருமோ?
மரணமில்லாத மயக்கம்.
கண்கள்
உண்மைதான்கண் - அது -'கள்'கண் அசைவினில்கவிதை சொல்வதும்காதலைத் தூதெய்வதும்கை வந்த கலையாமோ?பெண்களுக்கு.....
பெண்கள்
உண்மைதான்பெண்'கள்'- எழுதிய கடதாசிகளைகசக்கி எறிந்தான் மாறன்.
கவிதைப் புலம்பலைதந்தன கண்கள் என்றால்?
காதல் கொண்டது நெஞ்சம்.
கசக்கி எறியப்பட்டிருக்கும்இன்னும் கடதாசிகள்.

('அருவி' ஆடி -ஆவணி 2002).
சுவரோர சிந்தனைகள்.
--------------------------------------------------------------------------------
சினம் வரும்.சிந்தனைகள் பல விரியும்விழிகளில் தெரியும்.
மனம் மறுத்த பின்ஏதோ!உரக்க சொல்ல எண்ணும்.
யாருமில்லா அறையில்நான் மட்டும்இல்லை!
என் உடல் மட்டும் இருக்கஎண்ணங்கள்மெதுவாய் திறந்திருக்கும்சாளரம் வழி போயிருக்குமோ?
இன்றையஇதன் முன் சிறுவயது நிகழ்வுகள்இன்றைஇதன் முன் நேற்றுஅதன் முன்தினம்...
இப்போ என்ன?இனி என்ன?இவைதான்என்னுடல் விட்டு எண்ணும்.கீறல் போடவும் முடியாதவாடகைச் சுவரில்தெரியும் மனத்திரையில்சிரிப்பும் அழுகையும்
சேது போல் இருகைகள். சங்கிலிகள் இல்லாத சிறை.
இளமையின் முதிர்வுகள்எட்டிப்பார்க்கும் காலமோ?

(சேது போல் விக்ரம் திரைப்படம்.)
( பங்குனி 2002 'அருவி' சஞ்சிகையில் வெளிவந்தது.)__________________
விந்தையிலும் விந்தையடி!
--------------------------------------------------------------------------------
எந்தன் நினைவுக் குளியலில்உந்தன் கனவுகள் கரைவதேனடி!
அன்றுமட்டும் எனக்கும் மறக்கவில்லைஅடுத்ததெருவும் ஊரடங்குபோல் மூடிக்கிடந்ததனை!
இன்றும் நினைக்கையில் வெயில் சுடுகுதடி!அடுத்துதொடரும் நினைவுநிழல் குடையும்பிடிக்குதடி!
வெட்டைவெளியிலில் வானம் தெரியாதுசிட்டைப்போல் பறந்தனையே!பருவம் ஏங்குதடி! உருவம் தேடுதடி!
சிந்தையெனைமயக்கி சந்தித்ததெருவில்உந்தையழகிலுருக்கி சிந்திபோனதுன் நினைவுகள் விந்தையிலும் விந்தையடி!எந்தன் மனக்கொத்தி எங்கு போயினையோ?

காதல்!
--------------------------------------------------------------------------------
விழியை

எறிந்துஇதயம் தொலைத்துஉறவை வருத்தும் உறவோ?

__________________'உயிர்நேசி''தமிழ் உண்டு உயிர்வாழ்வேன்'நேசமுடன்...தமிழ்தாசன்.




'நாமெல்லாம் படைக்கப் பிறந்தவர்கள்'