என்னைத் துளைத்து எனக்குள் விதைத்து உயிர்குள் முளைத்தவை...
கி.ஆ.பெ.விசுவநாதம்;தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள்பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையென பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வேன் என்று
நினைத்தாயோ???
-பாரதியார்----
பொது நலத்துக்கு உழைக்கும் அறிஞர்களை
தன்னலத்துக்கு உழைப்பவர்கள் விரைவில் வென்று விடுவார்கள்.
முன்னது - ஆற்றின் ஊற்று நீர் போன்றது.
பின்னது - காட்டாற்றில் பெருகி வரும் வெள்ளம் போன்றது.
----
குறள்49.காலம் அறிதல்
'ஞாலங் கருதினுங் கைகூடும் - காலம் கருதி இடத்தாற் செயின் -484.'காலங் கருதி இருப்பர் - கலங்காது ஞாலங் கருது பவர்' -48574. நாடு
'பிணியின்மை செல்வம் விளைவின்பம் - ஏமம் அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து' -738
No comments:
Post a Comment