Thursday 22 May 2008

பிரசுரமானவை.





1.
இனித் தமிழிசை பாடவந்தேன்.
என் நாமம் தமிழ் வைத்தேன்.
இனி நான் எழுத்தில் தூங்கிடிலேன்.

பிறந்த மண்ணின் சுகம் மறந்திடேன்.
மறுபடியும்தேசம்
செல்ல வழி சொல்வேன் - வழி செல்வேன்.

காசுழைத்தும்
கடன் தீரா வாழ்வு கண்டேன் இங்கே!
மாசுபட்டு போயிடுமோ மனித வாழ்விங்கே!
தேசம் விட்ட வாழ்வும்,
தேகம் விட்டு உயிர் வாழும் அங்கே!
அதிலே நான் கண்டேன் இன்பம்.

பழங்கதை
கவிதை
சொன்னதை நான் சொல்லவில்லை
உலகறந்ததாம் நம்கதை.

ஊரில் அடிபட்டோம் ஏனோ உருப்பட்டோமா?
தேரிலா ஏறி தெருதாண்டி
ஊர்விட்டு உலகின் மேற்கு வந்தோம்.
நாயிலும் கேடாய்
பாயிலும் இல்லா படுக்கை.

நெஞ்சத்தை தொட்டுச் சொல் நிம்மதியாமோ?

காயும் நிலவும்,
பாயும் நதியும்,
வீசும் காற்றும்,
பேசும் தென்னம் கீற்றும்
பெண்ணும் கண்ணும்
இன்னும்
ஏதேதோ சொன்னேன்.
கவலை கட்டுண்டு உள்ளம் கிடந்தது.

மாறிவந்தோம்
மானம் வித்தோம்
மறுபடியும் வாழ்வு வர இங்காவது
உறவு கொள்வோம்.

சாதி விட்டாச்சு என்று பேச்சேயொழிய
முழுதாய் எரியலையே! – பெண்
சாதி அடிமை மொழிவிட்டாலும் அடிமதில் காயலையே?.
இவரைத்தேடிப்பிடி ஏறிமிதி
தாய்ப்பால் வெளிவரட்டும்.

சாதிவெறி பெண்ணடிமை சாம்பராகட்டும்.
0000000000000000000000000000
அருவி பத்திரிகை - என் பதிவு
0000000000000000000000000000

No comments: