Tuesday, 20 May 2008

தேசமே! வேதம்.

. தேடல். தேடல்என்பதுடன் - மனம்கூடல் கொண்டதால்நாடல் கண்டநடைமுறைகளின் வெளிப்பாடும்நாளைக்காலமும்நறுக்கென நினைவுகளில் வீழும்சுருக்குகள் முடிச்சவிழ்வதில்முன்நிற்கும் - ரமேஸ் வவுனியனின்கருக்கட்டியவைஇ மொத்தமும்கைதவழந்திடகைவருவதில்கைதொட்டுகையணைத்துமனம் மகிழ்ந்திட மகிழ்வு.
தேடல்வீட்டின் எங்கேயோ ஒரு முலையில்கூட்டில் குடிகொள்ளும்உணர்வின் ஓசைகளும்உலகின் எல்லையிலும்எல்லைவிhட்டு எங்கும் போகும்கற்பனையில் கடுகளவும்எங்கும் ஏங்கும் மனித நேயத்தின் மன அதிர்வுகளும்எல்லாவற்றையும் தாண்டிஅடி ஆழத்தில்தூரத்தே தெரியும்கிட்டத்து நிகழ்வுகளே!
'பிறந்து விட்டால் படைத்துவிடுஇறந்து விட்டாலும் பிறந்துவிடு'
( ரமேஸ் வவுனியன் அவர்களின் 'தேடல்' கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்ட நேசமடல். 2000 ஆண்டு)
2.வாலிபமே! வாழ்ந்துவிடு.
ஓ....வாலிபச் சிட்டுகளுக்காக சில வரிகள்..வாலிப நதியே!வழி தவறிப்பேவது ஏனோ?வாலிபத்தில் வாழ்ந்திட வேண்டிய நீவீழ்ந்திடலாகுமோ?
உன்சிறகுகளை போதைக்குள் சிறையிடாதே.சிந்தனைக்குள் அதையிடு.தேசத்துள் முளைவிடு.
மதுவுக்குள் மடிந்துமாதுவின் மயக்கத்தில் விழுந்துமரணிக்கவா நீ பிறந்தாய்?
வாலிபமே ! வாழ்ந்து விடு. வீழ்ந்து விடாதே!!!
(தமிழ்தாசனின்..'கசக்கி எறியப்பட்ட கடதாசிகள்...' கவித்தொகுப்பிலிருந்து..09.1996 ஜேர்மன் 'இளைஞன்' சஞ்சிகையில் வெளிவந்த கவிதை.)-----
தமிழ் மூச்செழுந்து எரிகிறது!
--------------------------------------------------------------------------------
வானம் கிழிந்தது!பூமிப்பந்தின் தமிழ் மூச்செழுந்து எரிகிறது!வெட்டிப்பேச்சும்இவெறும்பேச்சும்வெறுத்துப்போச்சு.குட்டிபோட்ட பூனையின் நிலையா நம் வாழ்வு?தட்டிக் கேட்கும் தன்மானக் குணம் எங்கே போச்சு?
கிட்டிபொல்லும் கிளித்தட்டும்கெந்திபிடித்த மணல் விளையாட்டும்குந்தியிருந்து வானத்து நிலாவுக்கு கூடிக்கொடுத்தமுற்றத்து முத்தமும்தென்னோலைக் கீற்று விரித்து பாக்குரலில் இடித்துக்கொண்டேபொக்கைவாய் பொன்னம்மாப்பாட்டி வாய் சிரித்து பாடிய காலங்கள் மறந்துபோச்சா?
வெள்ளுடை உடுத்திமெல்லநடை நடந்து பள்ளிபோனதும்பக்கத்து வாங்கு பகீரதனை பார்த்து நெளித்துபோனதும் நினைவிழந்தாச்சா?
தமிழ் வாத்தியார் பண்டிதர் ஈஸ்வரநாதபிள்ளை சொல்லிதந்த இலக்கியப்பாடம் இலக்கிழந்து போச்சா?
எகிறி எகிறி எத்தணித்தாலும்எல்லாம் மாறினாலும்என்னவோவெல்லாம் மறந்து போனாலும்தமிழ்க் குணமும்இவடிவமும்மாறிடாது.
பார் முகத்தை கண்ணாடியில் வடிவாய்ப்பார்.அப்போதாவது தெரியாவிட்டாலும்என்ன செய்ய? பார்த்தால்.வெட்கித் தலை குனியும்பார்.
தமிழைநேசித்தால் போதாதுதமிழ்வாழ தேசமன்றோ வேண்டும்.


விழிப்புடன்...
--------------------------------------------------------------------------------
விழிப்புடன்...வந்து வீழ்ந்துவிட்டபூமித்தாயின் மடியில்சிந்திய துளிகளில்சுகவாழ்வின் உச்சம் தேடும்விழிகள் விரித்துஉளம் சிரித்துஇலக்கு நோக்கிஎண்ணங்கள் ஓடும்.
தாய்மொழியுள்தேசத்துறவுள் - சொந்தம்ஆயுள் போயினும் கலந்திடும்.
முன்னும் முதுகின்பின்னும் அருகிலும்இ அகலமாய்விழிகள் விழித்திருக்கவிழிமூடித்தூங்கும் இரவுகள்சுகமான போதும்உலகும்-உலகுதாவியும்உலவ வேண்டும்மனக்கண்கள் விழிப்புடன்...

நட்புடன்...
--------------------------------------------------------------------------------
நாளையமகிழ்விற்கான இன்றையபார்வைகள்...மகிழ்வான உண்மை நேர்மை உழைப்புகொண்ட பயணங்கள்...தெளிவு கொண்ட தேடல்கள்...
'ஒரு முறை பிறப்புமறுமுறை வருகிலும்புரிந்திடாத் தன்மைகள்.
உடல் விட்டுப்போகும்உயிர் திசை தெரியாது.
இருந்ததில் பிறந்திடும்பிறந்தபின் இறந்திடும்முடிவுகள் தெரியா விடுகதைகள்.
எத்தனையில் போகும்எதில் போகும்விநாடிகள் புரியாத உயிர் நாடிகள்.பொருள் புரிந்தோமோ?
உனைக்கொன்று நான் வாழ்தலும் எனைக்கொன்று நீ வாழ்தலும்யாதும் பயனிலை.எழுவோம்செயற்படுவேம்பொருள் புரிந்துபுறப்படுவோம்.
('அருவி' சஞ்சிகை சித்திரை 2002 ல் எழுதப்பட்டது.)
துடிப்புடன்....
--------------------------------------------------------------------------------
துடிப்புடன்....உள்ளவைதான் உணர்வுள்ளவை. - அதிலும் மனிதம்அதுபோல நடிப்பவை ஏராளம்.அதனைத்தான்'நெஞ்சில் உரமுமின்றிநேர்மைத் திரனுமின்றிவஞ்சனை செய்வாரடி ....வாய்ச்சொல்லில் வீரரடி'பலருக்கே பொருந்தும்.
வலிமைமிக்க வரிகளைபார்வைகளினாலும் பழக்கத்தினாலும்பாடினார் மகாகவி.
முகங்களில் அழகு பூசி - அந்தேஅகங்களில் அழுக்குப்பாசிவார்த்தகைளோ வண்ணஜாலம்யாரோ உழைக்கயாரோ உண்டகதை.
அடக்குமுறைகள் அகலவிரித்துப்போட்டுக்கிடக்கின்றன. இதோ...முகமூடிகளுக்கு உரக்கச்சொல்வேன்....
காற்றையும் கட்டிப்போடலாம் ஆனால்உறுதியான உண்மைமிக்கஉணர்வுகளைமனிதநேய விழிப்புக்களைநெருங்கவே முடியாது.
என்றென்றும் மனிதநேயஉயிர்த் துடிப்புடன்.

('அருவி' 2002 ஆடி -ஆவணி)
காதலியே!
--------------------------------------------------------------------------------
விம்மி வெடிக்கிறது மனம்.உனை நினைக்கையிலே!
காதலியே!கன்னிக் கனவில் கலந்த காட்சிகள்பின்னிப்பிணைந்ததுபார்.எண்ணித்துடிக்குதே! ஏக்கம்தொடருதே!
கல்லிலும் காதல் தெரியுதடி!நெல்லு வயல்வெளியின் உயரே வானப் படுக்கையில்வண்ண ஓவியம் வரைந்த அந்த மாலைநெஞ்சுள் விரியுதடி!
உன் கண்ணில் எனைக்கரைத்தாய்உயிரில் உருகவைத்தாய்உனையே பருகவைத்தாய்.
'காதலியே!உனை நினைப்பதையே நினைக்கிறேன்உனை மறப்பதையே மறக்கிறேன்.'
ஓடை - 2
உருகுவதோ உள்ளம்!
'விழி அருகில் உதடுகள் வைத்தேன்மொழிகள் மறந்துபோய் மௌனமானேன்.ஏன்?என்னில் இத்தனை குழப்பங்கள்.தேன் இதழின் முத்தங்கள் பரிமாறும் உன் பார்வைகளில் நான் பாதியானேன்.'
'ம்ம்... இதற்கென்னமோ குறைச்சலில்லை..'
முறைத்துப் பார்த்தவளை இறுக்கிக்கொண்டான்.அவளின் மனதில் எத்தனை ஆனந்தம்.அவள் மட்டும் குறைந்தவளா என்ன?பதிலுக்கு பதில் அதில்தானே பரவசம்முத்தத்தில் ஒரு மகாயுத்தம்.
' போதும் பொன்மயிலே! உந்தன் மடிசாய ஆசை'வருணன் சொன்னதும்
நிலாமுகம் ஒளிவீசி புன்னகை பூத்தது.
'சாய்ந்து கொள்ள நீ இருந்தால் சத்தியமாய் உலகம் மறப்பேன்' வருணன்.
'............'
'விந்தியா ஏன் மௌனம்?இதற்கு பதில் இல்லையா?இல்லாவிட்டால்இ பெண்களே பேசும் மொழிஎன்பதால் மௌனமா?'
'என்னது பெண்களெல்லாம்...?அனுபவமோ? அதுதானே பார்த்தேன்பொய்யிலோ புலமை பெற்றவரோ?'
'என்னவளே! மேகங்கள் உரசுவதால்தான்மின்னல் வருகிறது.உந்தன் விழிகளில் படும் என் பார்வைகள்ஏனோ தோற்றுப்போகின்றன.?'
'மழுப்புவதில் மன்னர் போலும்'
கட்டிக்கொண்டான்.கன்னத்தில் முத்தமிட்டான்
'அடியே! நீ இன்றி ஒரு அணுவும் அசையாது காதலில்..... நனைந்தேன்.'இது என்னுள் ஏதோ சொல்லிற்று....'
பதிலுக்கு அவளும் இறுக்கிக் கொண்டாள்.இன்னும் இறுகிக் கொண்டாள்.
' இறவாத அன்பு வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்உனை என்றும் மறவாது வேண்டும்'
மனதுக்குள் பாடிக்கொண்டான்.உலகம் மறந்து போனது.
காதலின் கட்டில் பாடம் ஆரம்பமாகிறது.

-----('அருவி' வைகாசி 2002 )__________________ஓடை - 3
கண்களுக்கு!

முத்தமிட்டனமுதல் சந்திப்பாய்கடதாசியும் பேனாவும்.
'எத்தனை காலமும்எண்ணம் சொல்வதுகண்களே காதல் என்று.
முட்டியும்இமோதியும்விழிகள்வெட்டியும் - உதிரம் ஓடாஉணர்வான மோதல்.கட்டியும் போடாதுகெட்டியாய் பிடித்திடும்'
- கவிதை எழுதுகிறோம்
என்ற நினைப்பில்எழுதிய கடதாசிகளை கசக்கிஎறிந்தான் மாறன்.
மீண்டும்....
'கசக்கி எறியப்பட்ட கடதாசிகள்'
கண்களின் பார்வைகள்கசக்கி எறிந்தன.
கண்களில் மயங்கியவர் யாவருமோ?
மரணமில்லாத மயக்கம்.
கண்கள்
உண்மைதான்கண் - அது -'கள்'கண் அசைவினில்கவிதை சொல்வதும்காதலைத் தூதெய்வதும்கை வந்த கலையாமோ?பெண்களுக்கு.....
பெண்கள்
உண்மைதான்பெண்'கள்'- எழுதிய கடதாசிகளைகசக்கி எறிந்தான் மாறன்.
கவிதைப் புலம்பலைதந்தன கண்கள் என்றால்?
காதல் கொண்டது நெஞ்சம்.
கசக்கி எறியப்பட்டிருக்கும்இன்னும் கடதாசிகள்.

('அருவி' ஆடி -ஆவணி 2002).
சுவரோர சிந்தனைகள்.
--------------------------------------------------------------------------------
சினம் வரும்.சிந்தனைகள் பல விரியும்விழிகளில் தெரியும்.
மனம் மறுத்த பின்ஏதோ!உரக்க சொல்ல எண்ணும்.
யாருமில்லா அறையில்நான் மட்டும்இல்லை!
என் உடல் மட்டும் இருக்கஎண்ணங்கள்மெதுவாய் திறந்திருக்கும்சாளரம் வழி போயிருக்குமோ?
இன்றையஇதன் முன் சிறுவயது நிகழ்வுகள்இன்றைஇதன் முன் நேற்றுஅதன் முன்தினம்...
இப்போ என்ன?இனி என்ன?இவைதான்என்னுடல் விட்டு எண்ணும்.கீறல் போடவும் முடியாதவாடகைச் சுவரில்தெரியும் மனத்திரையில்சிரிப்பும் அழுகையும்
சேது போல் இருகைகள். சங்கிலிகள் இல்லாத சிறை.
இளமையின் முதிர்வுகள்எட்டிப்பார்க்கும் காலமோ?

(சேது போல் விக்ரம் திரைப்படம்.)
( பங்குனி 2002 'அருவி' சஞ்சிகையில் வெளிவந்தது.)__________________
விந்தையிலும் விந்தையடி!
--------------------------------------------------------------------------------
எந்தன் நினைவுக் குளியலில்உந்தன் கனவுகள் கரைவதேனடி!
அன்றுமட்டும் எனக்கும் மறக்கவில்லைஅடுத்ததெருவும் ஊரடங்குபோல் மூடிக்கிடந்ததனை!
இன்றும் நினைக்கையில் வெயில் சுடுகுதடி!அடுத்துதொடரும் நினைவுநிழல் குடையும்பிடிக்குதடி!
வெட்டைவெளியிலில் வானம் தெரியாதுசிட்டைப்போல் பறந்தனையே!பருவம் ஏங்குதடி! உருவம் தேடுதடி!
சிந்தையெனைமயக்கி சந்தித்ததெருவில்உந்தையழகிலுருக்கி சிந்திபோனதுன் நினைவுகள் விந்தையிலும் விந்தையடி!எந்தன் மனக்கொத்தி எங்கு போயினையோ?

காதல்!
--------------------------------------------------------------------------------
விழியை

எறிந்துஇதயம் தொலைத்துஉறவை வருத்தும் உறவோ?

__________________'உயிர்நேசி''தமிழ் உண்டு உயிர்வாழ்வேன்'நேசமுடன்...தமிழ்தாசன்.




'நாமெல்லாம் படைக்கப் பிறந்தவர்கள்'

No comments: