Monday, 16 June 2008

.

புலர்வுடன்..

விழித்துக் கொண்டால்
போதாது.
செழித்து விடவேண்டும்
வாழ்வு என்றால்,
சலியாத கடின செயற்பாடு முதல்,
நம்பிக்கை வைத்தே
நடைபோட வேண்டும்.
துன்பங்கள் கண்டு
துவண்டிட வேண்டாம்.
எத்தனை காலம்தான்
சொன்னோம் இதை
நம்மில் யார்தான்
விழிப்புற்றோம்?.

மொழி புரியா சோகங்களை
செவி கேட்டு அழுதது.?

சுதந்திரத்தில் கைவைத்தால்
சுவாசம் சுகமாகுமோ?

பேசுவது ஒன்றும் - பின்
பூசுவதும் ஒன்றுமாய்
மனிதரில் சில விசங்கள்..
இவை மாறிடாதா இங்கே?

நிமிடங்கள்,
நினைவுகள் தெளிவானால்
வெற்றி வாழ்வு
புலர்வுடன்.

- அருவி1 –ஊற்று9-2002 பிரதமஆசிரியர்- என் பதிவு

.

மூச்சு இழந்து விடவில்லை

இனமே!
இளைத்துவிட்டாயா?
இடம்மாறி, இடம்மாறி
இடம்மாறிய நிகழ்வுகளால் - நீ
இளைத்துவிட்டாயா?
உதைபட்டு, உதைபட்டு
உருண்டு நெளிந்து
இதைவிட
இனியென்னஇடமாற்றம்?
அது ஒரு காலம்!
தொடர்ந்ததும் தொடர்வதும்
உன்னால் தானாம்
இனி வரும் காலம்
உன் கையில் என்கிறது
காற்று
‘காற்று இன்னும் மூச்சு இழந்து விடவில்லை’
காலம் சொல்லிற்று!
'ஈழமுரசு’ வில் வெளியாகியது.

Sunday, 8 June 2008

நினைவுடன்…

நினைவுடன்…

என்றும் வாழ்வோம்
இது நிலைக்கவே,
மண்ணில் வாழ்வுக்கு
வாழவேண்டும்.

மூச்சு நிரப்பிவிட்ட
உயிர்ப்பை
பேச்சும் கற்றுபின்
ஏதேதோ ஆகி
காத்துப் போகும்காலம்
எது என்று
புரியாத உலகம்.

இதில்
மற்றவர் வாழ
வழிதந்தார் ஒரு சிலரே!
தாமும் வாழார்,
தள்ளியிருப்பவரும்
வாழ தள்ளி இரார்.

அழியும் தேகம்,
தெரியும்
ஆனாலும்
நாளும் கேடாய் வேசமிடும்.

பாரும் ஒரு சேதி!
பிறந்த பின் வாழ்வதும்
இறந்த பின் வாழ்வதும்
அவரவர்
சுயமான,
நினைவுடன்..

மார்கழி 2002 – ஊற்று 10 – அருவி1 – பிரதம ஆசிரியர். என் பதிவு.

.


உறுதியுடன்....
இணைகின்ற பயணம்..

… இமைக்கின்ற,
நடக்கின்ற, போதெல்லாம்
காலங்கள் நம்மைவிட்டு
கடக்கின்றது.

எவ்வளவு காலம்தான்
நாமே நம்மைப்பற்றி
குறை சொல்லிக்கொண்டே…

இதுவே
நமது வளர்ச்சிக்குதடையாக
இருக்குமல்லவா?

தனித்
தனியே ஒரு யாகம்
நமக்குள் நடக்கட்டும்.

தூய்மையான
உயிர்களின் நடமாட்டம்
நன்மையானதே! பூமி மகிழும்.

கவியரசரின் வரிகள் போல்
(போற்றுவோர் போற்றட்டும்…)
என்றும்
உறுதியுடன்.

பங்குனி 2002 -அருவி1 -ஊற்று3- அருவி பத்திரிகையின் பிரதம ஆசியர். என் பதிவு

மின்னலை விழுங்கியவன்.


மின்னலை விழுங்கியவன்
மண்ணுலக மகாமனிதன்
என்னை உயிர்ப்பித்தவன்
என் மனதில் நிலையானான்
பார் அதி யார்?

மாகவி சுப்பிரமணியபாரதி.

Saturday, 7 June 2008

இரண்டாயிரத்து இருபது

இரண்டாயிரத்து இருபது
2020
THAMIZHEEZHAM
கனவு
பார்வை
நேசமுடன் சு.பா.ஈஸ்வரதாசன்.
விடுதலை பெற்று விட்ட
தமிழீழம்
2020 ல்
எப்படி இருக்கும்.
நிச்சயம் நிகழும்.
ஒரு காலைக் கனவு

Thursday, 22 May 2008

பிரசுரமானவை.





1.
இனித் தமிழிசை பாடவந்தேன்.
என் நாமம் தமிழ் வைத்தேன்.
இனி நான் எழுத்தில் தூங்கிடிலேன்.

பிறந்த மண்ணின் சுகம் மறந்திடேன்.
மறுபடியும்தேசம்
செல்ல வழி சொல்வேன் - வழி செல்வேன்.

காசுழைத்தும்
கடன் தீரா வாழ்வு கண்டேன் இங்கே!
மாசுபட்டு போயிடுமோ மனித வாழ்விங்கே!
தேசம் விட்ட வாழ்வும்,
தேகம் விட்டு உயிர் வாழும் அங்கே!
அதிலே நான் கண்டேன் இன்பம்.

பழங்கதை
கவிதை
சொன்னதை நான் சொல்லவில்லை
உலகறந்ததாம் நம்கதை.

ஊரில் அடிபட்டோம் ஏனோ உருப்பட்டோமா?
தேரிலா ஏறி தெருதாண்டி
ஊர்விட்டு உலகின் மேற்கு வந்தோம்.
நாயிலும் கேடாய்
பாயிலும் இல்லா படுக்கை.

நெஞ்சத்தை தொட்டுச் சொல் நிம்மதியாமோ?

காயும் நிலவும்,
பாயும் நதியும்,
வீசும் காற்றும்,
பேசும் தென்னம் கீற்றும்
பெண்ணும் கண்ணும்
இன்னும்
ஏதேதோ சொன்னேன்.
கவலை கட்டுண்டு உள்ளம் கிடந்தது.

மாறிவந்தோம்
மானம் வித்தோம்
மறுபடியும் வாழ்வு வர இங்காவது
உறவு கொள்வோம்.

சாதி விட்டாச்சு என்று பேச்சேயொழிய
முழுதாய் எரியலையே! – பெண்
சாதி அடிமை மொழிவிட்டாலும் அடிமதில் காயலையே?.
இவரைத்தேடிப்பிடி ஏறிமிதி
தாய்ப்பால் வெளிவரட்டும்.

சாதிவெறி பெண்ணடிமை சாம்பராகட்டும்.
0000000000000000000000000000
அருவி பத்திரிகை - என் பதிவு
0000000000000000000000000000